Published : 27 Dec 2022 07:17 PM
Last Updated : 27 Dec 2022 07:17 PM

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-என்: 5 புதிய என்ட்ரி லெவல் வேரியண்ட் அறிமுகம் | கூடுதல் அம்சங்கள்

ஸ்கார்ப்பியோ-என்

சென்னை: மஹிந்திரா ஸ்கார்ப்பியோ-என் (2022) எஸ்யூவி-ல் ஐந்து புதிய என்ட்ரி லெவல் வேரியண்டுகளை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். கூடுதல் அம்சங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பையும் இந்த புதிய கார்கள் கொண்டுள்ளன. இந்த காருக்கு இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த எஸ்யூவி-க்கான புக்கிங் தொடங்கிய நொடி முதலே டிமாண்ட் தொடங்கிவிட்டது. அது எந்த அளவுக்கு என்றால் முன்பதிவு செய்தவர்கள் காரை பெற 2 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உருவானது. இந்த சூழலில்தான் என்ட்ரி லெவல் பிரிவில் கூடுதலாக ஐந்து மாடல்களை அறிமுகம் செய்ய காரணம்.

புதிய வேரியண்ட்டுகள்

  • Z2 பெட்ரோல் MT E
  • Z2 டீசல் MT E
  • Z4 பெட்ரோல் MT E
  • Z4 டீசல் MT E
  • Z4 பெட்ரோல் 4WD MT E

இப்போது சந்தையில் கிடைக்கும் ஸ்கார்ப்பியோ-என் எஸ்யூவியில் கூடுதல் அம்சங்களை சேர்த்துள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களும் இதில் அடக்கம். ரூ.11,99,000 தொடங்கி ரூ.19,19,000 விலைக்குள் இந்த எஸ்யூவியை பெற முடியும். இது எக்ஸ் ஷோரூம் விலை.

அண்மையில் இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்த குளோபல் என்சிஏபி. அதில் இந்த கார் 5 ஸ்டார்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x