Published : 26 Dec 2022 08:36 PM
Last Updated : 26 Dec 2022 08:36 PM

இந்திய சாலைகளில் மீண்டும் கைனடிக் லூனா: இம்முறை மின்சார வாகனமாக அவதரிப்பு

பழைய மாடல் லூனா | படம்: ட்விட்டர்

சென்னை: இந்திய வாகன சந்தையில் மீண்டும் கைனடிக் லூனா இருசக்கர வாகனம் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல். விரைவில் இதன் அறிமுகம் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த முறை மின்சார வாகனமாக இந்தியாவை வலம் வர உள்ளது லூனா. இது குறித்து பார்ப்போம்.

சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.2,000 என்ற விலையில் அறிமுகமானது லூனா. இதற்கான டிமாண்ட் சந்தையில் உச்ச நிலையை எட்டியபோது நாள் ஒன்றுக்கு 2,000 வாகனங்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மீண்டும் உயிர் பெற்றுள்ளது லூனா.

இந்த முறை மின்சார வாகனமாக கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூஷன்ஸ் சார்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது இந்த வாகனம். இதனை கைனடிக் குழுமம் உறுதி செய்துள்ளது. கைனடிக் இன்ஜினியரிங் லிமிடெட் சார்பில் மின்சார லூனாவின் சேசிஸ் மற்றும் பிற பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக தகவல்.

இதன் மூலம் கைனடிக் இன்ஜினியரிங் லிமிடெட் மீண்டும் சந்தையில் எழுச்சி காணும் என அந்நிறுவனம் நம்புவதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் இது மின்சார வாகன பிரிவில் தங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார லூனாவின் பாகங்களை அசெம்பிள் செய்யும் பணி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமத்நகரில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x