Published : 20 Dec 2022 05:46 PM
Last Updated : 20 Dec 2022 05:46 PM

சென்செக்ஸ் 104 புள்ளிகள் சரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செவ்வாய்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 104 புள்ளிகள் (0.17 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,702 ஆக இருந்தது. அதேவேளையில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35 புள்ளிகள் (0.19 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 18,385 ஆக இருந்தது.

செவ்வாய்கிழமை வர்த்தகம் 600 புள்ளிகள் சரிவுடன் கடும் வீழ்ச்சியிலேயே தொடங்கியது. காலை 09:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 586.29 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,219.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 182.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,238.05 ஆக இருந்தது.

அமெரிக்காவில் நிலவிவரும் மந்த நிலை, சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் 19 பாதிப்புகள், ஜப்பான் பேங்க் நீண்டகால வட்டி விகிதத்தை அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் பாதிக்கப்பட்டன. வர்த்தக நேரத்தின்போது சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்தன. அதிலிருந்து மீண்டெழுந்த போதிலும் சரிவுடனேயே நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 103.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,702.29 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 35.15 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 18,385.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ் போன்ற பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. இன்ஃபோசிஸ், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி. பஜார்ஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, பஜார்ஜ் ஃபைனான்ஸ் பவர் கிர்டு கார்ப்பரேஷேன் உள்ளிட்ட பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x