Published : 15 Dec 2022 06:30 AM
Last Updated : 15 Dec 2022 06:30 AM

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 அதிகரிப்பு

சென்னை: விலை பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.40,800-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிகரித்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.5,100-க்கும், பவுனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.40,800-க்கும் விற்பனையானது. அதேபோல, 24 காரட் சுத்த தங்கம் 8 கிராம் ரூ.44,016-க்கு விற்கப்பட்டது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.74,000 ஆக இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x