Published : 12 Dec 2022 05:27 PM
Last Updated : 12 Dec 2022 05:27 PM
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
விமானப் போக்குவரத்து வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள விமான நிலையங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
மேலும், விமான போக்குவரத்துத்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.98,000 கோடி முதலீட்டு செலவில் தற்போதைய விமான நிலையங்களை மேம்படுத்தவும், புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் இதர தனியார் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 7 வருடங்களில் குஜராத்தில் தொலேரா, ஹிராசர், ஆந்திரப் பிரதேசத்தில் தாகதர்த்தி, போகபுரம், ஒரவக்கல், அருணாச்சலப்பிரதேசம் இட்டாநகரில் உள்ள டோன்யி போலோ ஆகிய 6 பசுமை விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றில் ஒரவக்கல் மற்றும் டோன்யி போலோ விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனையக் கட்டிடக் கட்டுமானம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்காக 146 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்தன.
சென்னை விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 1125.91 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடப்பணிகள் 710.35 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் 46.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஓய்வு பெற்ற ஜென்ரல் வி.கே.சிங் எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT