Published : 09 Dec 2022 09:24 PM
Last Updated : 09 Dec 2022 09:24 PM
சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்வது தொடர்பான தளர்வுகளைக் கொண்டுவர சிறப்புப் பொருளாதார மண்டல சட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. திருத்தப்பட்ட இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகவல்களை அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தம், துறைசார்ந்த வல்லுநர்கள், பணிபுரிபவர்கள் மற்றும் தொடர்புடைய இதர அமைப்புகளோடு கலந்தாலோசனை செய்த பிறகு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் 31.12.2023 வரை அமலில் இருக்கும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நிறுவனங்களில் பணிபுரியும் 100 சதவீத பணியாளர்களுக்கும் இந்த சட்டத்திருத்த நடவடிக்கைகள் பொருந்தும்.
ஏற்கனவே வீட்டில் இருந்தே பணி செய்யும் வசதியை ஏற்படுத்தியிருக்கும் நிறுவனங்களுக்கு இந்த தகவல் அனுப்பிவைக்கப்படும். வருங்காலத்தில் இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் தேவையான அனுமதிகளை முறையாக முன்கூட்டியே பெறவேண்டும்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தின் போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்களில் வீட்டிலிருந்தே பணி செய்யும் வசதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த வசதியை தற்போது சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கும் நீட்டிப்பதன் மூலம் சிறு மற்றும் குறு நகரங்களிலும் உள்ளவர்கள் பயனடைவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT