Published : 07 Dec 2022 07:56 AM
Last Updated : 07 Dec 2022 07:56 AM
புதுடெல்லி: ஃபோர்ப்ஸ் ஆசியாவின் சமூக தொண்டுக்கான 16 வது பதிப்பு பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் சமூகதொண்டு பணிகளை கவுதம் அதானி அதிக அளவில் மேற்கொண்டு வருவதாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜூனில் தனது 60-வது வயதில் அடியெடுத்து வைத்த கவுதம் அதானி ரூ.60,000 கோடிக்கு சமூக நலப்பணிகளை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார். சுகாதாரம், கல்வி, திறன் மேம்பாடு ஆகியவற்றில் அதானி பவுண்டேஷன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. கடந்த 1996-ல்தொடங்கப்பட்ட இந்த பவுண்டேஷன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் 37 லட்சம் ஏழை மக்களுக்கு உதவி வருகிறது. கோடீஸ்வர கொடையாளர் பட்டியலில் ஷிவ் நாடாரும் இடம்பெற்றுள்ளார். இவரது பவுண்டேஷனும் பல்வேறு சமூக நல திட்டங்களுக்காக 1 பில்லியன் டாலர் வரை நன்கொடை அளித்துள்ளது.
நரம்பியல் மற்றும் முதுமை தொடர்பான உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2021 ஏப்ரலில் தொடங்கிய மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தொழிலதிபர் அசோக் சூட்டா ரூ.600 கோடி வழங்குவதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT