ஹைதராபாத் | ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம்: நாட்டிலேயே முதல் முயற்சி

கோல்டு ஏடிஎம்
கோல்டு ஏடிஎம்
Updated on
1 min read

ஹைதராபாத்: வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எல்லோரும் அச்சடித்த கரன்சி நோட்டுகளைதான் எடுப்போம். இந்தச் சூழலில் ஏடிஎம் மூலம் தங்கம் வாங்கலாம் என தெரிவித்துள்ளது ஹைதராபாத் நகரில் இயங்கி வரும் கோல்ட்சிக்கா நிறுவனம். நாட்டிலேயே முதல் முறையாக இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் தங்கத்தை அதிகம் நுகர்வு செய்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதனால், நம் நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அதைக் கருத்தில் கொண்டு தங்க நுகர்வை 24x7 என்ற கணக்கில் எந்நேரமும் பெற இந்த கோல்டு ஏடிஎம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோல்டு ஏடிஎம் அறிமுகம்
கோல்டு ஏடிஎம் அறிமுகம்

கோல்டு ஏடிஎம் மூலம் தங்கம் வாங்குவது எப்படி?

  • வழக்கமாக ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுக்கும் அதே நடைமுறை தான் இதற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கோல்ட் ஏடிஎம்-ல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயனர்கள் பயன்படுத்த முடியுமாம்.
  • தங்க காசுகளை மட்டுமே இந்த கோல்டு ஏடிஎம் மூலம் பயனர்கள் பெறமுடியும்.
  • 0.5 கிராம் முதல் 100 கிராம் வரையில் தங்க காசுகள் இந்த ஏடிஎம்-ல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சுத்தமான அசல் 24 கேரட் தங்க காசுகளை இந்த கோல்டு ஏடிஎம் வழங்குமாம்.
  • இந்த ஏடிஎம் இப்போது ஹைதராபாத் - பேகும்பேட் பிரகாஷ் நகர் மெட்ரோ நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ளதாம்.
  • பயனர்கள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் தங்கத்தை இந்த கோல்டு ஏடிஎம் மூலம் வாங்கலாம் என கோல்ட்சிக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in