Published : 01 Dec 2022 08:57 PM
Last Updated : 01 Dec 2022 08:57 PM
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சி சில்லறை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் மொத்த பரிவர்த்தனைக்கு அறிமுகாகி இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிஜிட்டல் வடிவிலான இந்த கரன்சி ‘இ-ரூபாய்’ என அறியப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறை இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அப்படி இருக்கும் சூழலில் டிஜிட்டல் கரன்சி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து பார்ப்போம்.
மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் என நான்கு நகரங்களில் சோதனை முறையில் சில்லறை பயன்பாட்டுக்கான டிஜிட்டல் கரன்சி அறிமுகாகி உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஆகிய நான்கு வங்கிகளில் இவை வெளியிடப்பட உள்ளது.
டிஜிட்டல் கரன்சி? - இன்றைய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகி உள்ளது. அது கரன்சி நோட்டுகளையும் விட்டு வைக்கவில்லை. மின்னணு சாதனங்களின் துணை கொண்டு இணையத்தின் மூலம் பணத்தை சேமிக்கவும், பரிமாற்றுவதும்தான் டிஜிட்டல் கரன்சி. இது முழுவதும் டிஜிட்டல் வடிவில் மட்டுமே இருக்கும். உலகில் டிஜிட்டல் கரன்சி முயற்சியை மேற்கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த டிஜிட்டல் கரன்சி தொடர்பான பரிவர்த்தனை டேட்டாபேஸ் விவரங்களை நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ நிர்வகிக்கும். கிட்டத்தட்ட ஒரு சேமிப்பு கணக்கை வங்கிகள் எப்படி நிர்வாகிக்குமோ அதே முறைதான். ஆனால் அது டிஜிட்டல் முறையில் இருக்கும். பயணத்தின் பரிணாமங்களில் இதுவும் ஒன்று. ஆதி காலத்தில் நாணய முறை கரன்சி நோட்டுகளாக மாறியது அல்லவா அது போலத்தான்.
கிரிப்டோ கரன்சி, வெர்ச்சுவல் கரன்சி மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் (சிபிடிசி) கரன்சி என இது மூன்று வகைகளாக உள்ளன. தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.
சிபிடிசி: பல்வேறு நாடுகளில் கரன்சி மற்றும் நாணயங்களை வெளியிடும் பணி உட்பட வங்கி, நிதி சார்ந்த பணிகளை முறைப்படுத்த மத்திய வங்கிகள் இருக்கும். இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல. அந்த வங்கிகள்தான் டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். இந்தியாவில் இ-ரூபாயை ரிசர்வ் வங்கிதான் வெளியிட்டுள்ளன. கரன்சி ரூபாய்க்கு நிகரான அதே மதிப்பு இ-ரூபாய்க்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹாமாஸின் சேண்ட் டாலர்தான் உலகின் முதல் சிபிடிசி என தெரிகிறது. சீனா, கானா, ஜமைக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த சிபிடிசி முயற்சியை கையில் எடுத்துள்ளன.
இதனை பயன்படுத்துவது எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT