Published : 28 Nov 2022 12:01 AM
Last Updated : 28 Nov 2022 12:01 AM
புது டெல்லி: ஸ்கூட்டர், பைக் என தங்கள் நிறுவன தயாரிப்புகளின் வாகன விலையை உயர்த்தி உள்ளது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம். வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி செய்து வரும் பன்னாட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. முன்னதாக, ஹீரோ ஹோண்டா என்ற பெயரில் கூட்டு நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வந்தது. பின்னர் இரு நிறுவனங்களும் தனித்தனியே பிரிந்து உற்பத்தி பணிகளை கவனித்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் வாக்கில் ஸ்பிளென்டர், எக்ஸ்பல்ஸ், எக்ஸ்ட்ரீம், மேஸ்ட்ரோ உட்பட பல்வேறு வாகனங்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தி இருந்தது ஹீரோ நிறுவனம். இந்த நிலையில் மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. அதிகபட்சம் இந்த புதிய விலை உயர்வு ரூ.1500 வரையில் இருக்கும் என தெரிகிறது. விலை உயர்வு மாடல் ரேஞ்ஜை பொறுத்து மாறும் என தெரிகிறது.
ஒட்டுமொத்தமாக உற்பத்தி செலவு வீதம் அதிகரித்ததுதான் இதற்கு காரணம் என ஹீரோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT