Published : 21 Nov 2022 06:47 AM
Last Updated : 21 Nov 2022 06:47 AM

கரோனா ஊரடங்கால் இந்தியாவில் 14% சிறு, குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடல்

கோப்புப்படம்

புதுடெல்லி: கரோனா தொற்று மிக வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், 2020 மார்ச் மாதம் மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது. இதனால், தொழில் செயல்பாடுகள் முடங்கியதால் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நிறுவனங்கள் தொழிலை நடத்த முடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டன. மக்கள் வேலை இழந்தனர். இந்த ஊரடங்கால் இந்தியா பொருளாதார இழப்பை எதிர் கொண்டது.

இந்நிலையில், தொழில்முனைவோர்களுக்கான உலகளாவிய கூட்டணி அமைப்பு (கேம்), கரோனா காலகட்டத்தில் இந்தியாவில் தொழில்துறை எதிர்கொண்ட பாதிப்புகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 14 சதவீத சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பணப்புழக்கம் இல்லாதது காரணமாக இந்நிறுவனங்கள் மூடப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் இந்நிறுவனங்களில் 40% நிறுவனங்களுக்கு கடன் மறுக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தொழிலை தொடர்ந்து நடந்த முடி யாத நெருக்கடிக்கு அந்த நிறுவனங்கள் உள்ளாகின என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x