Published : 16 Nov 2022 07:23 PM
Last Updated : 16 Nov 2022 07:23 PM
புதுச்சேரி: பூவுலகில் மனிதகுலத்தின் எண்ணிக்கை 800 கோடியை கடந்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது. இந்நிலையில், இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ, 800 கோடி மக்கள்தொகையுடன் சைவ பிரியாணி உணவை தொடர்புப்படுத்தி ஒரு ட்வீட் செய்துள்ளது. அது நெட்டிசன்கள் மத்தியில் கவனமும் பெற்றுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் போனில் சொமேட்டோ போன்ற டெலிவரி நிறுவன ஆப் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றிக்கொள்ள முடியும்.
ஒரு பக்கம் உலகம் 800 கோடி மக்கள் தொகையை எட்டியுள்ள சூழலில் ஏனோ சைவ பிரியாணி பிரியர்களை மிஸ் செய்வதாக ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது சொமேட்டோ. இது இப்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. “உலகில் இப்போது 8 பில்லியன் மக்கள் மற்றும் 0 வெஜ் பிரியாணி பிரியர்களும் உள்ளனர்” என அந்நிறுவனம் நேற்று ட்வீட் செய்திருந்தது.
பிரியாணி மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாக உள்ளது. தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி என பிரியாணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான கடைகளில் வியாபாரமும் அந்த பிரியாணியை போலவே ஆவி பறக்க பறக்க நடைபெறும். இந்திய மசாலாக்களை பயன்படுத்தி ‘கமகம’ நறுமணத்தில் இறைச்சி சேர்த்தும், சேர்க்காமலும் பிரியாணி தயார் செய்யப்படுகிறது.
சிலர் பிரியாணி என்றாலே அதில் இறைச்சி இருக்க வேண்டும் என சொல்வது வழக்கம். சைவ முறை பிரியாணி பிரியர்கள் சமயத்தில் கேலிக்கும் ஆளாவது உண்டு. இத்தகைய சூழலில் சொமேட்டோ கோதாவில் குதித்து இந்த ட்வீட்டை போட்டுள்ளது.
என சொமேட்டோ ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளனர். சிலர் அதனை கவித்துவமான காவிய ட்வீட் என்றும் போற்றி வருகின்றனர்.
the world now has 8 billion people and 0 veg biryanis
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT