ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அபராதம் - ரூ.984 கோடி ரீபண்ட் தொகையை உடனே வழங்க உத்தரவு

ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அபராதம் - ரூ.984 கோடி ரீபண்ட் தொகையை உடனே வழங்க உத்தரவு
Updated on
1 min read

வாஷிங்டன்: பயணிகளுக்கு வழங்க வேண்டியரீபண்ட் தொகையை உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்ததால், ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அமெரிக்க போக்குவரத்துக் கழகம் 1.4 மில்லியன் டாலர் (ரூ.11கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், 121.5 மில்லியன் டாலர்(ரூ.984 கோடி) ரீபண்ட் தொகையைஉடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க விமானத் துறை விதியின்படி, அமெரிக்காவிலிருந்து புறப்படும் விமானங்கள் திடீரென்று தங்கள் சேவையை ரத்து செய்தால் அதற்கான ரீபண்ட் தொகையை பயணிகளுக்கு அந்நிறுவனங்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

கரோனா காலகட்டத்தில் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை அடிக்கடி ரத்து செய்யும் நிலைக்கு உள்ளாகின. அப்படியாக, ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவில் தனது சேவையை பலமுறை ரத்து செய்துள்ளது. பயண நேரத்தையும் மாற்றி அமைத்துள்ளது. ஆனால், அது தொடர்பாக பயணிகளுக்கு வழங்க வேண்டிய ரீபண்ட் தொகையை உரிய நேரத்தில் வழங்கவில்லை. ஏர் இந்தியா மட்டுமல்ல, டிஏபி போர்ச்சுகல், ஏரோ மெக்சிக்கோ, பிரன்டியர் உட்பட 6 விமான நிறுவனங்கள் ரீபண்ட் வழங்குவதில் காலதாமதம் செய்துள்ளன. இந்நிலையில் இந்நிறுவனங்கள் பயணிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.4,860 கோடி ரீபண்ட் தொகையை உடனடியாக வழங்க அமெரிக்க போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிறு வனங்களுக்கு ரூ.58 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in