Published : 16 Nov 2016 10:36 AM
Last Updated : 16 Nov 2016 10:36 AM
பொதுமக்களுக்கு உதவும் விதமாக 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் விநியோகம் செய்யப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். வங்கி ஏடிஎம் மையங்களில் பணமில்லாமல் மக்கள் ஏமாற்ற மடைந்துவரும் நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அருந்ததி பாட்டாச்சார்யா பொதுமக்களின் சிரமங்களுக்கு உதவும் விதமாக வங்கிகள் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை விரைவில் வழங்கும் என கூறினார்.
பணிச் சுமை 50% குறைந்துள்ளது
தென் மாநிலங்களில் உள்ள கிளைகளில் பணிச் சுமை 50 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. தங்களுக்கு வசதியான நேரத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணமாகும் என்று அவர் கூறினார்.
எனினும் எல்லோரும் ஒரே நேரத்தில் ஏடிஎம் இயந்திரங்களை நாடுவதால் ஏடிஎம் மையங்களில் எதிர்பார்த்ததைவிட பண இருப்பு மிக வேகமாக குறைவதாகக் குறிப்பிட்டார். ஏடிஎம் இயந்திரங் களில் 100 ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கான இடம் மட்டுமே இருக்கிறது. புதிய நோட்டுகளுக்கு ஏற்ப ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் பண இருப்பு சீக்கிரம் தீர்ந்துவிடுகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் புதிய ரூபாய் நோட்டு அளவீடுகளுக்கேற்ப மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் மனிதர் கள்தான் பணத்தை நிரப்ப வேண்டி யுள்ளது. இந்த பிரச்சினையை நவம்பர் மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவோம். இந்த குழுப்பம் சரிசெய்யப்படும் வரை, வரும் நாட்களில் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க உள்ளோம் என்றார்.
இதற்கிடையே ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்யும் பணிகளை துரிதப்படுத்த, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்கள் முழுமையாக செயல்படுவதற்கான நடவடிக்கை களை இந்த குழு மேற்கொள்ளும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT