Published : 02 Nov 2022 05:37 AM
Last Updated : 02 Nov 2022 05:37 AM

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.116 குறைப்பு

சென்னை: வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.116.50 குறைந்து ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர்விலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.116.50 குறைந்துள்ளது. இதனால், அதன் விலை ரூ.2,009.50-ல் இருந்து ரூ.1,893 ஆகக் குறைந்தது. கடந்த மே 19-க்குப் பின்னர் 7-வது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வீட்டில் சமையல்செய்ய பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,068.50-க்கு விற்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x