Published : 12 Nov 2016 09:05 AM
Last Updated : 12 Nov 2016 09:05 AM
சீனாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குழுமம் ‘சிங்கிள்ஸ் டே’ விற்பனையை நேற்று நடத் தியது. விற்பனை தொடங்கிய முதல் 5 நிமிடத்தில் 100 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. விற்பனையின் முதல் 1 மணி நேரத்தில் 500 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.33,619 கோடி) அளவுக்கு வர்த்தகம் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் அலிபாபா குழுமம் நவம்பர் 11-ம் தேதி ஒரு நாள் மட்டும் 24 மணி நேர சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. ‘சிங்கிள்ஸ் டே’ என்று அழைக்கப்படும் இந்த விற்பனைக்காக மக்கள் காத்துக் கொண்டிருப்பர். 2009-ம் ஆண்டு முதல் இந்த ‘சிங்கிள்ஸ் டே’ விற்பனையை நடத்தி வருகிறது. முக்கியமாக இந்த விற்பனையில் ஸ்மார்ட் போன்கள் அதிகம் விற்பனையாகும்.
நட்சத்திர விளையாட்டு வீரர்களான டேவிட் பெக்காம் மற்றும் கோப் பிரையாண்ட் ஆகியோருடன் இந்த ஆண்டு ‘சிங்கிள்ஸ் டே’ விற்பனையைத் தொடங்கியது. ‘பிளாக் பிரைடே’ மற்றும் ‘சைபர் மண்டே’ ஆகிய ஆன்லைன் விற்பனை திருவிழாக்களை விட மிக அதிகமான பொருட்கள் இந்த ‘சிங்கிள்ஸ் டே’ விற்பனையில் இடம்பிடித்தன.
விற்பனை தொடங்கிய 5 நிமிடத்திலேயே 100 கோடி டாலருக்கு பொருட்கள் விற்று தீர்ந்தன. அடுத்த ஒரு மணி நேரத்தில் 500 கோடி டாலருக்கு பொருட்கள் விற்று தீர்ந்தன.
``2013-ம் ஆண்டு எங்க ளுடைய ஒரு நாள் விற்பனை 515 கோடி டாலருக்கு இருந்தது. தற்போது அதை 1 மணி நேரத்திலேயே அடைந்து விட்டோம். முதல் 5 நிமிடத்தில் முதல் 100 கோடி பரிவர்த் தனைகள் நடைபெற்று முடிந்து விட்டன.’’ என்று அலிபாபா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டேனியல் ஷாங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT