Published : 07 Oct 2022 05:39 AM
Last Updated : 07 Oct 2022 05:39 AM
புதுடெல்லி: ஆகாஸா ஏர் கடந்த ஆகஸ்ட் 7-ல் பயணிகள் விமான சேவையை தொடங்கியது. சேவை தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பெல்ஸன் கவுட்டின்ஹோ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
விமானப் பயணத்தின்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை வழங்க வேண்டும் என்பதில் நிறுவனம் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் எங்களது விமானங்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லலாம். இந்த பயணத்துக்கான முன்பதிவு அக்டோபர் 15-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
ஒரு பயணிக்கு ஒரு செல்லப்பிராணி என்ற வகையில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும். செல்லப்பிராணியின் எடை 7 கிலோ வரை இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்துக்கு சொந்தமாக 6 விமானங்கள் உள்ளன. இதனை நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 18 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 2 Comments )
செல்லபிராணிகளுடன் பிரயாணம் செய்ய விரும்புவர்களுக்கு இது 'ஆஹா 'சா விமானம் .
0
0
Reply
//தங்களுக்கு பிடித்தமான பூனை, நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்லலாம். //என்னென்ன என்று தெளிவாக சொல்லிவிடுங்கள் .சிறுத்தையும் , ஜாகுவாரும் கூட சிலருக்கு செல்ல பிராணிகள் தான் .
0
0
Reply