Published : 04 Sep 2022 06:47 AM
Last Updated : 04 Sep 2022 06:47 AM
புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் வருமான வரித் துறை ரூ.1.14 லட்சம் கோடியை திருப்பி வழங்கி உள்ளது.
இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதிவரை, 1.97 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, அவர்கள் கூடுதலாக செலுத்திய ரூ.1.14 லட்சம் கோடியை திருப்பித் தந்துள்ளோம். இதில், வருமான வரி ரூ.61,252 கோடியும் கார்ப்பரேட் நிறுவன வரி ரூ.53,158 கோடியும் அடங்கும்” என கூறப்பட்டுள்ளது.
நடப்பு 2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில் நேரடி வரி வருவாய், கடந்த நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 34% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதே காலத்தில் கார்ப்பரேட் வரியாக ரூ.7.23 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாகவும் வரித்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT