Published : 03 Sep 2022 11:07 AM
Last Updated : 03 Sep 2022 11:07 AM

உலகப் பொருளாதார வளர்ச்சி: 5வது இடத்தில் இந்தியா; பிரிட்டனை பின்னுக்குத் தள்ளியது

பொருளாதார வளர்ச்சியில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2021ஆம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களில் எடுக்கப்பட்ட கணக்கின்படி உலகின் 5வது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக் குறியீடு எனப்படும் ஜிடிபியின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்தியா 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது கணிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் 11வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது இந்தப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சர்வதேச நிதியமும், வருடாந்திர அடிப்படையில் டாலர் மதிப்பீட்டு அளவில் எடுத்த பொருளாதார வளர்ச்சிக் கணக்கீட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆசியாவின் பவர்ஹவுஸ் என்று அறியப்படும் இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது..

பிரிட்டனில் ஆட்சித் தலைமை மாறவுள்ள சூழலில் இதுபோன்ற பொருளாதார வீழ்ச்சி புதிதாக பொறுப்பேற்கும் பிரதமருக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பிரிட்டன் கடந்த 40 ஆண்டுகளாக மிக வேகமாக உயரும் பணவீக்கப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு 2024 வரை தொடரும் என அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

நடப்பாண்டு நிலவரம்: இந்நிலையில் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.7 சதவீதமாக சரியும் என சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான மூடிஸ் கணித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம், வட்டி விகிதங்கள் அதிகரிப்பு, சமச்சீரற்ற பருவநிலை மற்றும் சர்வதேச வளர்ச்சியில் மந்தநிலை போன்ற காரணங்களால் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முன்பு கணிக்கப்பட்டதைவிட குறையும் என்பது தற்போதைய மதிப்பீட்டின் மூலமாக தெரியவந்துள்ளது. அதன்படி, முன்பு 8.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி தற்போது 1 சதவீதம் குறைந்து 7.7சதவீதமாக மட்டுமே இருக்கும் என்பது தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x