Published : 29 Aug 2022 08:01 PM
Last Updated : 29 Aug 2022 08:01 PM

வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் பயணிகள் உணவு ஆர்டர் செய்யலாம்: ஐஆர்சிடிசி | எப்படி?

கோப்புப்படம்

வாட்ஸ்அப் மெசேஜிங் சேவை மூலம் ரயில் பயணிகள் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது ஐஆர்சிடிசி. பயணிகள் தங்களது பயணச்சீட்டில் உள்ள பிஎன்ஆர் எண்ணை பயன்படுத்தி இந்த வசதியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஐஆர்சிடிசி மற்றும் ஜியோ Haptik-ம் இணைந்து செயல்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் சேட்டில் இருந்தபடியே பயணிகள் ‘Zoop’ என தெரிவிக்கப்பட்டுள்ள இந்த செயலியில் உணவு ஆர்டர் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. பயணிகள் வேறு எந்தவொரு லிங்கிற்கும் ரீ-டைரக்ட் செய்து செல்ல வேண்டியதில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்ய பிரத்யேகமாக செயலி ஏதும் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் பிஎன்ஆர் எண்ணை கொண்டு ஆர்டர் செய்யும் பயணிகளின் இருக்கைக்கே உணவு டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த உணவை ரியல் டைமில் டிரேக் செய்யும் வசதியும் உள்ளதாம்.

ஐஆர்சிடிசி இ-கேட்டரிங் முறையின் ஒரு பகுதியாம் இது. பயணிகள் +91 7042062070 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் சாட் செய்து உணவை ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் உறுதி செய்யப்பட்டதும் உணவு இருக்கைக்கு கொண்டுவரப்படுமாம்.

இப்போதைக்கு இந்த சேவை குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விஜயவாடா, வதோதரா, மொராதாபாத், வாரங்கல், பி.டி. தீன்தயாள் உபாத்யாயா, கான்பூர், ஆக்ரா, துண்ட்லா சந்திப்பு, பல் ஹர்ஷா சந்திப்பு மற்றும் 100-க்கும் மேற்பட்ட A1, A மற்றும் B வகை ரயில் நிலையங்களில் இந்த சேவை கிடைக்குமாம்.

மெனுவை பொறுத்தவரையில் வெஜ் தாளி, வெஜ் அல்லது ரைத்தாவுடன் சிக்கன் பிரியாணி, ஜெயின் சிறப்பு தாளி போன்ற உணவுகளை மட்டுமே இதில் ஆர்டர் செய்து பெற முடியும். இதற்கான பேமென்டை வாட்ஸ்அப் மூலமாகவே செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x