Published : 20 Jun 2014 11:01 AM
Last Updated : 20 Jun 2014 11:01 AM

சேத்தன் அய- இவரைத் தெரியுமா?

#மார்கன் ஸ்டான்லி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார நிபுணரும் கூட.

#2000-ம் ஆண்டில் மார்கன் ஸ்டான்லி நிறுவனத்தில் இணைந்தார். அதற்கு முன்பு பி.என்.பி. பரிபா நிறுவனத்தில் பொருளாதார நிபுணராகவும், யுக்திகளை வகுப்பவராகவும் இருந்தார்.

#மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். முதுகலை பொருளாதாரம் (பட்டயபடிப்பு) மற்றும் பொதுக்கொள்கை நிர்வாகத்தில் முதுகலை பட்டத்தை லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

#இந்தியா, சீனா மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளைப் பற்றி தொடர்ந்து ஆராய்ந்து வருபவர். அது சம்பந்தமாக பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார்.

#உடனடியாக 7 சதவீத வளர்ச்சி சாத்தியம் இல்லை என்றாலும் 2016-ல் 6.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்றும், அடுத்த பத்து வருடங்களில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 6.75 சதவீதமாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

#மேலும், 2025-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 5 டிரில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x