Published : 24 Aug 2022 06:45 PM
Last Updated : 24 Aug 2022 06:45 PM
சென்னை: 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிலக்கரி நிறுவனங்கள் ரூ.1.74 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக மின் உற்பத்தி செய்ய முடியாமல் பல மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் பல மாநிலங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட்டது. மேலும் நிலக்கரி ரயில்களை வேகமாக இயக்க 1100 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், பல மாநிலங்கள் வெளி நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்தன.
இந்தியாவில் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் வருவாய் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கோல் இந்தியா நிறுவனம் 2019-20ம் ஆண்டில் ரூ.1,34,979 கோடியும், 2020-21 ம் ஆண்டில் ரூ.1,26,786 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.1,52,667 கோடியும், 2022-23ம் ஆண்டில் ஜூன் 30-ம் தேதி வரை ரூ.29,400 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
என்எல்சி நிறுவனத்திற்கு 2020-21ம் ஆண்டில் ரூ.78.87 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.919 கோடியும், 2022-23ம் ஆண்டில் ஜூன் 30-ம் தேதி வரை ரூ.360 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
சிங்கரேணி கோலரிஸ் நிறுவனம் 2019-20ம் ஆண்டில் ரூ.18,634 கோடி, 2020-21ம் ஆண்டில் ரூ.13,405 கோடி, 2021-22ம் ஆண்டில் ரூ.20,986 கோடியும், 2022-23ம் ஆண்டில் ஜூன் 30-ம் தேதி ரூ.7,905 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இதில் 2021-22ம் நிதியாண்டில் இந்தியாவின் 3 பொதுத்துறை நிலக்கரி நிறுவனங்கள் 1.74 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT