Published : 10 Aug 2022 09:33 PM
Last Updated : 10 Aug 2022 09:33 PM

பானிபட்: 2ஜி எத்தனால் ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: உலக உயிரி எரிபொருள் தினமான இன்று ஹரியாணா மாநிலம் பானிபட்டில் அமைக்கப்பட்டுள்ள 2-ம் தலைமுறை (2ஜி) எத்தனால் ஆலையை பிரதமர் நரேந்திர மோடி, காணொலி வாயிலாக நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், ஹர்தீப் சிங் பூரி, ராமேஸ்வர் தெலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்சியில் பிரதமர் மோடி பேசியது: “உலக உயிரி எரிபொருள் தினமான இந்த நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் இந்த இனிய நேரத்தில் 2022 ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் அபாரமாக செயல்பட்ட ஹரியாணாவைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும், ஹரியாணா மாநிலத்திற்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எத்தனால் ஆலை ஒரு தொடக்கம். இதனால் டெல்லி, ஹரியாணா மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசுபாட்டைக் குறையும்.

இயற்கையை வழிபடும் தன்மை கொண்ட நம்மைப் போன்ற நாடுகளில், உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு இணையாகக் கருதப்படுகிறது. நமது விவசாய சகோதர சகோதரிகள் இதனை புரிந்து கொள்வார்கள். நம்மைப் பொறுத்தவரை உயிரி எரிபொருள் என்பது பசுமை எரிபொருளாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் எரிபொருள் என்று பொருள்படும். இந்த நவீன ஆலை அமைக்கப்பட்டிருப்பதன் மூலம், நெல் மற்றும் கோதுமை பெருமளவில் சாகுபடி செய்யப்படும் ஹரியாணா மாநில விவசாயிகள், தங்களது பயிர் கழிவுகள் மூலமும் லாபம் பெறலாம்.

பானிபட் உயிரி எரிபொருள் ஆலை, பயிர் கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்தும். இது பல்வேறு பலன்களை அளிக்க வகை செய்யும். இதன் முதல் அம்சம் என்னவென்றால், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் வலியிலிருந்து பூமித்தாய் விடுவிக்கப்படுவார்.

இரண்டாவது அம்சம், பயிர்க் கழிவுகளை அகற்றுவது மற்றும் அவற்றை அப்புறப்படுத்த புதிய நடைமுறைகள் உருவாவதுடன், அவற்றை எடுத்துச் செல்ல புதிய போக்குவரத்து வசதிகள் கிடைப்பதுடன், புதிய உயிரி எரிபொருள் ஆலைகள் தற்போது இந்த கிராமங்களில் புதிய வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.

மூன்றாவது அம்சம், விவசாயிகளுக்கு பெரும் சுமையாக, கவலை அளிப்பதாக இருந்த பயிர்க்கழிவுகள் தற்போது அவர்களுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தர வகை செய்யும்.

நான்காவது அம்சம், காற்று மாசுபாடு குறைவதுடன், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் விவசாயிகளின் பங்களிப்பு அதிகரிக்கும். ஐந்தாவது அம்சம் என்னவென்றால், நாட்டிற்கு மாற்று எரிபொருள் கிடைக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற ஆலைகள் அமைக்கப்படுவது மகிழ்ச்சியை தருகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x