Published : 08 Aug 2022 10:03 PM
Last Updated : 08 Aug 2022 10:03 PM

இந்தியாவில் அறிமுகமானது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்: விலை & சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய வாகன சந்தையில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 என்ற புதிய மாடல் பைக்கை அறிமுகம் செய்து உள்ளது. இந்த வாகனத்தின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்து வரும் இருசக்கர வாகனங்களில் ஒன்று ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மாடல் பைக்குகள். புல்லட் தொடங்கி இமாலயன் வரையில் பல்வேறு மாடல்கள் இப்போது பயன்பாட்டில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் தொடங்கி பலதரப்பட்ட வயதினரையும் கவர்ந்து வருகிறது ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகள்.

அதன் காரணமாக தங்கள் வாடிக்கையாளர்களின் சாலை பயணத்தில் சுவாரசியம் சேர்க்கும் வகையில் புதுப்புது மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது ‘ஹண்டர்’ என்ற மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டிசைன்: முற்றிலும் இந்த பைக் ராயல் என்ஃபீல்டின் முந்தைய மாடலை போல் இல்லாமல் ஸ்போர்ட்டி லுக் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த பைக் கொஞ்சம் ஷார்ட்டாக உள்ளது. நிச்சயம் இதன் டிசைன் சந்தையில் ஸ்போர்ட்டி லுக் கொண்ட பைக்குகளை விற்பனை செய்து வரும் மற்ற நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கும் என தெரிகிறது. இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • மேம்படுத்தப்பட்ட 349சிசி சிங்கிள் சிலிண்டர், டூ-வால்வு, SOHC, ஏர்/ஆயில்-குளிரூட்டப்பட்ட எஞ்சினை கொண்டுள்ளது ஹண்டர் 350.
  • 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்.
  • அதிகபட்சமாக மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் ஹண்டரில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • லிட்டருக்கு 36.2 கிலோமீட்டர் தூரம் வரை மைலேஜ் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மெட்ரோ மற்றும் ரெட்ரோ என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த பைக் அறிமுகமாகி உள்ளது.
  • இதில் மெட்ரோ வேரியண்ட் 6 வண்ணங்களிலும், ரெட்ரோ வேரியண்ட் 2 வண்ணங்களிலும் கிடைக்கிறது.
  • டியூயல் டிஸ்க், டியூயல் ஏபிஎஸ், ஆன்-தி-கோ சார்ஜிங், டிஜி-அனலாக் மீட்டர் போன்ற அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளது.
  • இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.50 லட்சம் முதல் ரூ.1.69 லட்சம் வரையில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x