Published : 13 Jul 2022 09:42 AM
Last Updated : 13 Jul 2022 09:42 AM

நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பங்குச்சந்தையில் நிதி திரட்ட முடிவு: நிதின் கட்கரி

புதுடெல்லி: சாலைத் திட்டங்களுக்காக அரசு மூலதனச் சந்தைகளில் இருந்து நிதி திரட்டும் என மத்தியப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது:

உலகளாவிய மந்தநிலை குறித்த அச்சம் இருந்தபோதிலும், உள்கட்டமைப்பு துறை திட்டங்களுக்கு நிதியளிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. இப்போது நாங்கள் மூலதனச் சந்தைக்குச் செல்கிறோம். எங்களுக்கு நிதி ஆதாரப் பிரச்சினைகள் இல்லை. ஆனால் பணக்காரர்களின் நிதியைப் பயன்படுத்த விரும்பவில்லை. பங்குச் சந்தைக்குச் செல்கிறோம். சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து முதலீடுகளை பெறப் போகிறோம். ரூ. 1 லட்சம், ரூ. 2 லட்சம் என சிறிய தொகையாக பெறப்போகிறோம். 8 சதவீத வருமானம் உத்தரவாதம்.

இதனால், சந்தையில் இருந்து பெரும் பணம் கிடைக்கும். கட்டுமான உபகரணத் துறையின் அளவு ரூ.50,000 கோடி, ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தத் துறை சிக்கலை எதிர்கொள்கிறது. டீசல் விலை உயர்வால், பொருளாதார ரீதியிலான சிக்கலை எதிர்கொள்கிறோம். விரைவில், டீசலை ஒழிக்க வேண்டும். இது அபாயகரமான எரிபொருளாகும்.மெத்தனோல், எத்தனோல் மற்றும் பச்சை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதே அரசின் கொள்கை.

எலக்ட்ரிக் மொபிலிட்டிதான் எதிர்காலம். சில இந்திய நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கத் தொடங்கியதால், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் சந்தைப் பங்கு அதிகரித்து, வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்கு குறைந்துள்ளது. போதுமான நிலக்கரி இருப்பு இருந்தும், இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க 60 நிலக்கரி சுரங்கங்களை தனியார் மயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.

உயர்ந்து வரும் கச்சா விலையானது இந்த நிதியாண்டில் பெட்ரோல் மீதான செஸ் குறைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். இதனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இன் கேபெக்ஸ் நிதிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்குமா என்ற கேள்வி உள்ளதால் நிதி அமைச்சகம் அதைப் பரிசீலிக்கும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கான பட்ஜெட் செலவினத்தின் பெரும்பகுதி பெட்ரோல் மற்றும் டீசல் செஸ் பாயும் மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் இருந்து வரும் . பொருளாதார நம்பகத்தன்மை இல்லாமல் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்காது. கட்டுமான உபகரண உற்பத்தியாளர்கள் எரிபொருள் சிக்கனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

திறமையான மனிதவளம், தகுந்த பயிற்சி மற்றும் நீண்ட கால திட்டமிடலுக்கான சாலை பாதுகாப்பு அவசியம்.கட்டுமான உபகரணங்கள் தொழில் இந்திய பொருளாதாரத்திற்கு பலத்தை அளித்து வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x