Published : 25 May 2016 11:04 AM
Last Updated : 25 May 2016 11:04 AM
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்துள்ளதால், பலமான வங்கிகளுடன் பலவீ னமான வங்கிகளை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வங்கிகள் வாரியத்தின் தலைவரான வினோத் ராய் கூறும் போது, பொதுத்துறை வங்கிகளில் ஏற்கெனவே திட்டமிட் டதை விட கூடுதலான நிதியை முதலீடு செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித் தார்.
மேலும் தற்போது இருக்கும் 27 பொதுத்துறை வங்கிகளை ஆறு பெரிய பொதுத்துறை வங்கிகளாக மாற்றவும் திட்டமிட்டிருப்பதாக கூறினார். பலவீனமான வங்கிக ளுக்கு இணைப்புக்கு முன்பாக மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க திட்டமிட்டுள்ளது. அதேபோல பலமான வங்கிகளும் இணைப்பு குறித்து முடிவு எடுக்க வேண்டும்.
நடப்பு நிதி ஆண்டில் 25,000 கோடி ரூபாயை பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இது இறுதியான தொகையல்ல. வங்கிகளுக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் நடப்பு நிதி ஆண்டில் மேலும் முதலீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது.
ஏற்கெனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய ஐந்து துணை வங்கிகளையும், பாரதிய மகிளா வங்கியை இணைக்க திட்டமிட்டிருக்கிறது. இன்னும் அதிக வங்கி இணைப்பினை எதிர்பார்க்கிறேன். ஆனால் அதற் கான காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. பலமான வங்கி கள் சிறிய வங்கிகளை இணைப் பது குறித்து யோசிக்க வேண்டும். பொதுத்துறை வங்கிப் பங்குகள் புத்தகமதிப்புக்கு கீழே வர்த்தக மாகி வருகின்றன. இந்த மதிப்பீடு கள் மிகவும் கவர்ச்சிகரமானவை.
பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வரும் நிலையில் `பேட் பேங்க்’ என்னும் புதிய அமைப்பை உருவாக்கும் திட்டமில்லை. வாராக்கடனை விற் பதற்கு ஏற்கெனவே 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் (ஏஆர்சி) உள்ளன. அந்த நிறுவனங்களே போதுமானவை. ஆனால் பொதுத் துறை வங்கிகளே தங்களுடைய வாராக்கடனை இன்னும் அந்த நிறுவனங்களுக்கு விற்காமல் இருக்கின்றன என்றார்.
இந்தியாவில் கொடுக்கப்ப டும் கடனில் 70 சதவீத கடன்கள் பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்படுகின்றன. பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அந்த வங்கிகளை மேம்படுத்த வங்கி வாரியம் என்னும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT