Published : 10 Jun 2022 07:24 PM
Last Updated : 10 Jun 2022 07:24 PM
புதுடெல்லி: இந்திய வாகன சந்தையில் அறிமுகமாகி உள்ளது வோக்ஸ்வோகன் நிறுவனத்தின் வெர்ச்சுஸ் (Virtus) கார். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.11.22 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விவரங்கள் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டின் மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வோகன் உலகம் முழுவதும் கார்களை விற்பனை செய்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கார் தயாரிப்பு கூடங்களையும் நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்தின் வெர்ச்சுஸ் கார் இந்தியச் சந்தையில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என நீண்ட நாட்களாகவே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகியுள்ளது. இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது செடான் மாடல் கார் ஆன வெர்ச்சுஸ்.
டைனமிக் லைனில் மூன்று வேரியண்டும், பெர்ஃபார்மர் லைனில் ஒரு வேரியண்டிலும் இந்தக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கார்களின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.11.22 லட்சத்தில் தொடங்கி ரூ.17.92 லட்சம் வரை செல்கிறது. இதன் வெளிப்புறத் தோற்றத்தை பொறுத்தவரையில் வோக்ஸ்வோகன் நிறுவனத்துக்கே உரிய வழக்கமான டிசைனை கொண்டுள்ளது.
ஹெட் லாம்ப், டெயில் லாம்ப் என அனைத்தும் எல்.இ.டி வகையில் வெளியாகியுள்ளது. ஜிடி பிளஸ் லைன் காரில் கருப்பு நிற அலாய், கருப்பு நிற ரூஃப், ஜிடி பேட்ஜ், டூயல் டோன் டச் மாதிரியானவை அசத்துகிறது. இண்டீரியரை பொறுத்தவரையில் Taigun எஸ்.யூ.வி காரை பிரதி எடுத்தது போல உள்ளது. 10 இன்ச் இன்போடெய்ன்மென்ட் டிஸ்பிளே, 8 இன்ச் டிஸ்பிளே கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், சன் ரூஃப், ஆறு ஏர்பேக்ஸ், வென்டிலேட்டட் ஃபிராண்ட் சீட்ஸ், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜரும் உள்ளது.
எஞ்சினை பொறுத்தவரையில் டைனமிக் லைனில் 1.0 TSI, 110bhp, 178Nm டார்க், 6 ஸ்பீடு மேனுவல் / ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ், 999 சிசி, பிஎஸ் 6-இல் வந்துள்ளது. பெர்ஃபார்மர் லைனில் 1.5 TSI, 1.5 TSI, 148bhp, 250Nm டார்க், 7 ஸ்பீடு கியர், 1498 சிசி, பிஎஸ் 6-இல் வந்துள்ளது. மைலேஜை பொறுத்தவரையில் 18.67 முதல் 19.40 வரை லிட்டர் ஒன்றுக்கு கிடைக்கிறது. இந்தக் கார் பெட்ரோலில் இயங்கும் வகையில் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT