Published : 07 Jun 2022 10:09 PM
Last Updated : 07 Jun 2022 10:09 PM
புது டெல்லி: இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான பிசிக்ஸ்வாலா (PhysicsWallah) யுனிகார்ன் கிளப்பில் இணைந்துள்ளது. முதல் முறையாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியாக திரட்டி யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது அந்நிறுவனம்.
இதன் மூலம் இந்தியாவின் 101-வது யுனிகார்ன் நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது பிசிக்ஸ்வாலா. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 100 கோடி அமெரிக்க டாலர்களை கடந்தால் யுனிகார்ன் என்ற அந்தஸ்தை எட்டும். ஜேஇஇ, நீட் போன்ற தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் பணியை செய்து வருகிறது பிசிக்ஸ்வாலா. இப்போது அந்நிறுவனம் சீரிஸ் ஏ மூலம் ரூ.777 கோடி நிதியை திரட்டியுள்ளது. வெஸ்ட்பிரிட்ஜ் மற்றும் ஜிஎஸ்வி வென்ச்சர் போன்ற நிறுவனங்கள் இந்த முதலீட்டில் பங்கேற்றன.
நொய்டாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இந்நிறுவனம் இந்த நிதியை கொண்டு வணிக விரிவாக்கம், விளம்பரம், பயிற்சி கூடம் நிறுவுதல் மற்றும் கூடுதலாக சில பயிற்சி வகுப்புகளை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த 2020-இல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.
யூட்யூப், வலைதளம் மற்றும் செயலி மூலம் இயங்குகிறது பிசிக்ஸ்வாலா. ஆண்ட்ராய்டு தளத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் செயலியை 52 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 69 லட்சம் பேர் இதன் யூட்யூப் கணக்கை சப்ஸ்கிரைப் செய்துள்ளார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT