Published : 01 Jun 2022 09:47 AM
Last Updated : 01 Jun 2022 09:47 AM
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.
சிலிண்டருக்கு ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.2219 என்றளவில் உள்ளது. மும்பையில் ரூ.2171.50 காசுகளுக்கும், கொல்கத்தாவில் ரூ.2,322க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூ.2373க்கு விற்பனை செய்யப்படும்.
அதே வேளையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அண்மையில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைந்தது. ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசின் விலை குறைப்பை வாட் வரியைக் குறைத்து அமலுக்கு கொண்டு வந்துள்ளன. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பை வலியுறுத்தி பாஜக ஆர்ப்பாட்டம் செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT