Published : 18 May 2022 09:18 PM
Last Updated : 18 May 2022 09:18 PM

உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை 2018-ன் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை - 2018 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், உயிரி எரிபொருள் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 01-ம் தேதி முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

^ உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கான கூடுதல் மூலப்பொருட்கள் இருப்பு வைக்க அனுமதித்தல்,

^ பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பது என்ற இலக்கை 2030 என்பதிலிருந்து நிதியாண்டு 2025-26க்கு மாற்றுதல்

^ சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல்

^ தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல்

^ குறிப்பிட்ட பிரிவுகளில் உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்தல் போன்றவை உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கியமான திருத்தங்களாகும்.

உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கூடுதலான மூலப்பொருட்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது தற்காப்பு இந்தியாவை மேம்படுத்தும். மேலும் 2047-க்குள் எரிசக்தி சுதந்திரம் உள்ளதாக இந்தியா மாற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு இது ஊக்கமளிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x