Published : 11 May 2022 06:51 PM
Last Updated : 11 May 2022 06:51 PM
புதுடெல்லி: இந்திய வாகன சந்தையில் டாடா நிறுவனம் நெக்ஸான் EV மேக்ஸ் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மின்சார சக்தியில் இயங்கும் வாகனமாகும்.
இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் தங்கள் நிறுவனம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அண்மைய காலமாக மின்சார வாகன உற்பத்தியில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. நெக்ஸான் EV மற்றும் டிகோர் EV கார்களை தொடர்ந்து நெக்ஸான் EV மேக்ஸ் கார் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எஸ்.யூ.வி காரின் எக்ஸ் ஷோரூம் (டெல்லி) விலை 17.74 லட்ச ரூபாயில் தொடங்கி 19.24 லட்ச ரூபாய் வரை உள்ளது. இந்த மாடலில் 40.5 kWh பேட்டரி பேக் இடம் பெற்றுள்ளது. இதன் ARAI ரேஞ்ச் 437 கிலோமீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. XZ + மற்றும் XZ + லக்ஸ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த கார் கிடைக்கிறது. மூன்று வண்ணங்களில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் முந்தைய மாடலை காட்டிலும் இந்த கார் அப்டேட் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கேபின் மற்றும் சென்டர் கன்சோல் போன்றவையும் மாற்றம் கண்டுள்ளதாம். மூன்று வகையிலான டிரைவ் மோடுகளில் இந்த காரை இயக்கலாம். 50 kW DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் 56 நிமிடத்தில் 80 சதவீத சார்ஜை பேட்டரியில் ஏற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT