Published : 09 May 2022 03:39 AM
Last Updated : 09 May 2022 03:39 AM

டாடா ஏஸ் மின்சார வாகனம்  | இந்திய சந்தையில் அறிமுகம்

புது டெல்லி: முழுவதும் மின்சார சக்தியில் இயங்கும் டாடா ஏஸ் (Ace) மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது டாடா நிறுவனம். கமர்சியல் வாகன பிரிவில் இந்திய உற்பத்தியாளரின் முதல் மின்சார வாகனம் இது.

'குட்டி யானை' என அறியப்படுகிறது டாடா ஏஸ் வாகனம். இந்திய அளவில் பிரபலமாக அறியப்படும் வாகனங்களில் ஒன்று. யானையை போல சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சுமந்து செல்லும் என்பதால் இந்த பெயர். கடந்த 2005 வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மினி டிரக் வகையில் இந்த வாகனம் அப்போது அறிமுகமானது. டாடா நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படிப்படியாக பல்வேறு வேரியண்ட்டுகளில் டாடா நிறுவனம் ஏஸ் வாகனத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மின்சார சக்தியில் இயங்கும் டாடா ஏஸ் (Ace) மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது டாடா. இந்த வாகனம் டாடா ஏஸ் EV என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 154 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் இதில் இடம்பெற்றுள்ளது. வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வகையில் மோட்டார், பேட்டரி மற்றும் சில பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேகமாக சார்ஜ் செய்வதற்காக இரண்டு சார்ஜிங் போர்ட்டுகள் இந்த வாகனத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக சார்ஜ் செய்தால் 105 நிமிடங்களில் இதன் பேட்டரியை சார்ஜ் செய்து விடலாம் என சொல்லப்பட்டுள்ளது.

6000 லிட்டர் கொள்ளளவை கொண்டுள்ளது இந்த வாகனம். 600 கிலோகிராம் வரை சரக்குகளை சுமந்து செல்லும் திறன் படைத்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 39 ஆயிரம் வாகனங்களை அமேசான், பிக் பாஸ்கெட், ஃபிளிப்கார்ட் போன்ற டெலிவரி நிறுவனங்களுக்கு வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது டாடா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x