Published : 24 Jun 2014 11:29 AM
Last Updated : 24 Jun 2014 11:29 AM

ஜான் சேம்பர்ஸ் - இவரைத் தெரியுமா?

$ சிஸ்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.

$ 1991-ம் ஆண்டு சிஸ்கோ நிறுவனத்தின் துணைத் தலைவராக சேர்ந்தார். 1994-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

$ ஐ.பி.எம். நிறுவனத்தில் விற்பனை பிரிவில் ஆறு வருடங்களும், வேங்க் லேபரட்டரீஸ் நிறுவனத்தில் எட்டு வருடங்களும் பணிபுரிந்தார்.

$ சட்டப்படிப்பும், வியாபாரத்தில் இளங்கலை பட்டமும் படித்தவர். இந்தியானா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (நிதி நிர்வாகம்) படித்தவர்.

$ இவர் தலைமை பொறுப்பை ஏற்றபோது 1.2 பில்லியன் டாலராக இருந்த ஆண்டு வருமானம் இப்போது 23.8 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.

$ சிறந்த சி.இ.ஓ., சக்தி மிக்க நபர் போன்ற பல விருதுகளை உலகின் முன்னணி பத்திரிகைகள் இவருக்குக் கொடுத்திருக்கின்றன. அதேபோல வேலை செய்வதற்கு ஏற்ற சிறந்த நிறுவனங்களின் பட்டியலிலும் சிஸ்கோ இடம் பிடித்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x