வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துகிறது எஸ்பிஐ: இஎம்ஐ உயரும்

வட்டி விகிதத்தை 0.1% உயர்த்துகிறது எஸ்பிஐ: இஎம்ஐ உயரும்

Published on

மும்பை: பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிததத்தை 0.1% உயர்த்தியுள்ளது. இதனால் கடன் பெற்றிருப்பவர்களின் இஎம்ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும்.

எஸ்பிஐயின் பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதம் (EBLR) 6.65% ஆகவும், ரெப்போ அடிப்படையிலான கடன் விகிதம் (RLLR) 6.25 ஆகவும் ஏப்ரல் 1 முதல் நிர்ணயிக்கப்பட்டது. எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகிறது.

திருத்தத்தின் மூலம், ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் முந்தைய 7 சதவீதத்தில் இருந்து 7.10 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒன்று மற்றும் 3 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 10 பிபிஎஸ் அதிகரித்து 6.75% ஆகவும், ஆறு மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் 7.05% ஆகவும் அதிகரித்துள்ளது. அதுபோலவே இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1% அதிகரித்து 7.30% ஆகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.40% ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பாலான கடன்கள் ஓராண்டு எம்சிஎல்ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்டதாகும்.

இதனால் வங்கியில் கடன் பெற்றிருப்பவர்களின் இஎம்ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரக்கூடும். எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இஎம்ஐ கட்டணம் உயரும், மற்ற பெஞ்ச்மார்க் அடிப்படையில் வாங்கியவர்களுக்கு உயராது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in