Published : 19 Apr 2022 02:54 PM
Last Updated : 19 Apr 2022 02:54 PM
புதுடெல்லி: 2022 ஜீப் காம்பஸ் நைட் ஈகிள் எஸ்யூவி-யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஜீப் இந்தியா நிறுவனம். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சம் குறித்து பார்க்கலாம்.
ஜீப் இந்தியா நிறுவனம் தனது பிரபல காம்பஸ் மாடல் எஸ்யூவியில் '2022 நைட் ஈகிள்' என்ற புதிய வேரியன்டை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக நடப்பு ஆண்டில் காம்பஸ் டிரையல்ஹாக் மற்றும் மெரிடியனை அறிமுகம் செய்திருந்தது ஜீப். இந்நிலையில், தற்போது 2022 நைட் ஈகிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் பெயருக்கு ஏற்ற வகையில் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் என இரண்டிலும் கருப்பு நிற தீம் பின்பற்றப்பட்டுள்ளது.
7 வண்ணங்களில் கிடைக்கிறது இந்த எஸ்யூவி. இரண்டு எஞ்சின் ஆப்ஷனில் வெளிவந்துள்ளது. சிக்ஸ் ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 2.0-லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் செவன் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கூடிய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினிலும் இந்த எஸ்யூவி கிடைக்கிறது.
10.1 இன்ச் டச் ஸ்கிரீன், எல்இடி ஹெட்லேம்ப்கள், டியூயல் ஸோன் கிளைமெட் கன்ட்ரோல், வயர்லெஸ் இணைப்பு வசதி, ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மாதிரியானவை இதில் உள்ளது.
இதன் கிரில், கிரில் ரிங், 18 இன்ச் அலாய் வீல்கள் போன்றவை கருப்பு நிற ஃபினிஷிங்கில் உள்ளன.
டீசல் எஞ்சின் 21.96 லட்ச ரூபாய்க்கும், பெட்ரோல் எஞ்சின் 22.75 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
ஜீப் காம்பஸ் மாடலுக்கு எப்போதுமே வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த புதிய வேரியன்டுக்கும் அதே வரவேற்பு கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஜீப் பிராண்ட் தலைவரான நிபுண். ஜே.மகாஜன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT