Last Updated : 22 Jun, 2014 01:04 PM

 

Published : 22 Jun 2014 01:04 PM
Last Updated : 22 Jun 2014 01:04 PM

சிறந்த குழு அமைந்தால் வெற்றி நிச்சயம்: ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் பேட்டி

ஒரு காலத்தில் சென்னைவாசிகள் மத்தியில் மட்டும் பிரபல மாயிருந்த அந்நிறுவனம் இன்று தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என தென் மாநிலங்களில் பிரபலமாகத் திகழ்கிறது. சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையில் ஒரு விற்பனையகமாக 1964-ல் தொடங் கப்பட்டு இன்று தங்கம், வைரம், பிளாட்டினம் வெள்ளி நகை விற்பனை, ஹோட்டல் துறை, பள்ளி, கல்லூரி என பல்வேறு துறைகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. குடும்பத் தொழிலாக ஆரம் பித்து இன்று பல்வேறு தொழில் களில் பரிணமிக்கும் ஜிஆர்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபனை (ஆனந்த்) சந்தித்து உரையாடிய திலிருந்து…

20 ஆண்டுகளாக நிறுவனத்தை நடத்துகிறீர்கள்? நிறுவன வளர்ச்சிக்கு எது உதவியாக இருந்தது?

வாடிக்கையாளர்கள்தான் நிறுவன வளர்ச்சிக்கு உறு துணை. எங்கள் கடைக்கு தொடர்ந்து அடிக்கடி வரும் வாடிக்கையாளர் கள் உள்ளனர். வாடிக்கையாளர்கள் தான் எங்களது மிகப் பெரும் பலம். இதனால்தான் 50 ஆண்டுகளில் 25 விற்பனையகங்களைத் திறந்து வெற்றிகரமாக நடத்தி வர முடிகிறது.

இந்தத் தொழிலின் தனித்துவம் அல்லது உங்கள் நிறுவன வெற்றி ரகசியம் என்று எதைக் கருதுகிறீர்கள்?

சென்னையில் 9 விற்பனையகம் இருந்தாலும், பிரதான விற் பனையகத்துக்கென்றே வரும் வாடிக்கையாளர்களும் உண்டு. இதற்குக் காரணம் நிறுவனரை பார்த்து பேசிவிட்டு சந்தோஷமாக நகை வாங்கிச் செல்லலாம் என்பதே. அந்த அளவுக்கு வாடிக்கை யாளர் சேவையை சிறப் பாக அளிக்கிறோம். வாடிக்கை யாளர்கள்தான் கடவுள் என்று தந்தை அடிக்கடி கூறுவார். அணி யும் சட்டையும், சாப்பிடும் உணவும் வாடிக்கையாளர்களால் கிடைப் பது என்பதை அடிக்கடி நினைவு படுத்துவார். இதை ஊழியர்களிட மும் கூறி இன்முக சேவை அளிக்க வலியுறுத்துகிறோம். கனிவான சேவைக்காக ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாக சேவை அளிக்க சிறந்த பணியாளர்களை வைத்துள்ளோம். மிகச் சிறந்த குழு அமையாமல் எந்த தொழிலிலும் வெற்றி பெற முடியாது. அந்த வகை யில் எங்களிடம் மிகச் சிறந்த ஊழி யர்கள் குழு உள்ளது. தனி ஒரு ஆளாக எந்தத் தொழிலிலும் ஜெயிக்க முடியாது. சச்சின் டெண் டுல்கர் சிறந்த வீரர் ஆனால் அவருக் கும் 10 பேரடங்கிய குழு வேண்டும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறந்த நடிகர், ஹீரோயின், அவருக்கு இணையான வில்லன், சிறந்த இசை, பாடல் இல்லையேல் படம் சோபிக்குமா? அதைப்போல்தான் இந்தத் தொழிலும்.

ஊழியர்கள் மிகச் சிறந்த பலம் என்கிறீர்கள்? அவர்களுக்கு சிறப்புச் சலுகைகள் தரப்படுகின்றனவா?

புதிய விற்பனையகம் தொடங் கப் போகும்முன்பு அந்தப் பகுதி யைச் சேர்ந்தவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கிறோம். திருமணம் ஆகாதவரென்றால் அவர்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் அளிக்கிறோம்.

இந்த வர்த்தகத்தில் ஈடுபட் டுள்ள பிற நிறுவனங்களோடு ஒப்பிடு கையில் மிகச் சிறந்த ஊதியம் மற்றும் சலுகைகள் அளி்க்கிறோம். இஎஸ்ஐ, எல்ஐசி காப்பீடு, போனஸ், விற்பனைக்கு ஏற்ற இன்சென் டிவ் உள்ளிட்டவை தருகிறோம். ஊழியர்களின் இரண்டு குழந்தை களுக்கு கல்வி வசதிக்கான செலவை நிர்வாகம் ஏற்கிறது. பெண் குழந்தைகளுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டும் போடுகிறோம்.

இன்ஃபோசிஸ், டிசிஎஸ் நிறு வனங்களில் பணிபுரிவதை பெரு மையாகக் கூறுவதைப் போல ஜிஆர்டி நிறுவனத்தில் பணிபுரி வதை பெருமையாகக் கூற வேண்டும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கி றோம். குடும்ப நிறுவனமாக இருந் தாலும் இதை தொழில்முறை நிறு வனமாக நடத்துகிறோம்.

ஆன்லைன் வர்த்தகமும் தொடங்கியுள்ளீர்கள்? அது எவ்விதம் செயல்படுகிறது?

தங்க நகைகள் வாங்குவது என்பது தொட்டு உணர்ந்து பார்த்து அதை அணிந்து பார்த்து வாங்கும் பழக்கம்தான் நம்மி டையே அதிகம் உள்ளது. இருந் தாலும் வெளிநாட்டில் உள்ளவர் கள் பிறந்த நாள் பரிசு, திருமண பரிசு என அளிப்பதற்கு ஆர்டர் செய்கின்றனர். பரிசுப் பொருள்கள் தான் அதிக அளவில் ஆன்லைனில் விற்பனையாகிறது.

இத்தொழிலில் கடும் போட்டி நிலவுகிறது? எப்படி சமாளிக்கிறீர்கள்?

போட்டி அவசியம். பிற நிறுவனங் களைவிட சிறப்பாக சேவை அளிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருவதே போட்டிதான். பிற நிறுவனங்கள் பற்றி கருத்து கூறுவ தில்லை. சந்தை வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது. எங்களது வாடிக்கையாளரைத் தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து முயன்று வரும் அதேவேளையில் புதிய வாடிக்கையாளர்களையும் கவர முயற்சிக்கிறோம். அதற் காக புதிய டிசைன் நகைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே யிருக்கிறோம்.

1980-களில் விலையை மட்டுமே வாடிக்கையாளர்கள் பார்த்தனர். 1990-களில் இது சற்று மாறி விலை யுடன் தரத்தையும் பார்த்தனர். 2000-ம் ஆண்டுகளில் விலை, தரம் இவற்றோடு தொழில்நுட்பமும் சேர்ந்தது. 2010-வாக்கில் விலை, தரம், தொழில்நுட்பம் இவற் றோடு இன்னோவேஷன் எனப் படும் புதிய உத்திகளும் சேர்ந்துள் ளது. மாற்றத்துக்கு ஏற்ப மாற்றங் களைக் கொண்டு வந்துகொண்டே யிருக்கிறோம்.

ஹோட்டல் தொழிலில் இறங்கியது ஏன்?

மாற்றம் கருதிதான். அத்துடன் அது முழுமையான நிர்வாக அமைப்பின்கீழ் செயல்படுகிறது. சொந்தமாகவும், குத்தகை அடிப் படையிலும் ஹோட்டல், ரிசார்ட்ஸ் நடத்தி வருகிறோம்.

அப்பா ஆரம்ப காலத்தில் சிரமப் பட்டார். பள்ளி, கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட காலத்திட்டம். ஏழை, எளிய மாணவர்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக நன்கொடை வசூலிக்காமல் வெறும் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்து பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறோம்.

இந்த இரண்டு தொழிலுக்கும் நிறுவனர் தேவையில்லை ஆனால் தங்க நகை வர்த்தகத்துக்கு வாடிக் கையாளர்கள் முதலாளியை நேரடியாக சந்திக்க விரும்புகின்ற னர். இதனால் சகோதரரும் நானும் ஏதாவது ஒரு விற்பனையகத்தில் தொடர்ந்து இருப்போம்.

வேறெந்த தொழிலில் ஈடுபட்டுள்ளீர்கள்?

ஹோட்டல் மற்றும் தங்க நகை விற்பனையகத்துக்கு மின் சாரம் அவசியம். இதற்காக திருநெல் வேலியில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அமைத்துள்ளோம். சூரிய மின்னாற்றலில் ஈடுபடும் திட்டமும் உள்ளது.

தங்க நகை முதலீடா? சேமிப்பா? இது குறித்து விளக்கமாக கூறுங்களேன்?

மிகவும் எளிமையான முதலீடு தங்கம்தான். தங்கத்தின் விலையைத் தெரிந்து கொண்டு கையிலிருக்கும் சேமிப்புக்கு ஏற்ப தங்கம் வாங்க முடியும். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வ தென்றால் அதைப்பற்றி அறிந் திருப்பது அவசியம். நிலத்தில் முத லீடு செய்தாலும் அதை அடிக்கடி சென்று பார்ப்பது அபூர்வம். இரண்டாவதாக வீடு வாங்கினாலும் அதில் வசிக்க முடியாது.

தங்க நகை அணிவது கவுரவத் தின் அடையாளம். உங்கள் மனைவி, பெண் ஆகியோர் அதிக தங்க நகை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது உங்களுக்குப் பெருமை சேர்க்கும். தங்க நகை அணிவது சந்தோஷம் அளிக்கும். வேறெந்த முதலீடும் சந்தோஷம் தராது.

ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x