Published : 05 Apr 2022 12:30 PM
Last Updated : 05 Apr 2022 12:30 PM

ஊழியர்கள் அலுவலகம் திரும்ப இ-ஸ்கூட்டர்களை வழங்கி ஊக்கம் கொடுக்க கூகுள் திட்டம்

கரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு சொல்லியிருந்தது. இந்தச் சூழலில் தற்போது ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்புமாறு அந்நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதனை கூகுள் மாதிரியான உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் முன்னெடுத்துள்ளன. இத்தகைய நிலையில் மீண்டும் அலுவலகம் திரும்ப ஊழியர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இலவசமாக இ-ஸ்கூட்டர்களை வழங்க கூகுள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போதைக்கு இந்தத் திட்டம் அமெரிக்க நாட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இ-ஸ்கூட்டர் தயாரிக்கும் நிறுவனத்துடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தெரிகிறது.

மின்சார ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வரும் உனகி (Unagi) என்ற நிறுவனத்துடன் இணைந்து 'ரைடு ஸ்கூட்' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளதாம் கூகுள். இது குறித்து கூகுள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருந்தாலும் உனகி நிறுவனத்தின் நிறுவனர் டேவிட் ஹைமன் இதனை உறுதி செய்துள்ளார். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் கூகுள் நிறுவன ஊழியர்களுக்கு இ-ஸ்கூட்டர் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 75000 ரூபாய் மதிப்புள்ள உனகி நிறுவனத்தின் 'மாடல் ஒன்' ஸ்கூட்டரை ஊழியர்கள் பயன்படுத்த மாத சந்தாவில் கூகுள் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் 9 முறையேனும் இந்த வாகனத்தை அலுவலகம் வர பயன்படுத்தினால் மட்டுமே அதற்கான சந்தா தொகையை கூகுளே செலுத்தும் எனவும் தெரிகிறது. ஊழியர்கள் அலுவலகம் வர பேருந்து சேவையையும் வழங்கி வருகிறது கூகுள். விரைவில் இதற்கான டெமோவை கூகுள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x