Published : 04 Apr 2022 01:15 PM
Last Updated : 04 Apr 2022 01:15 PM
கொழும்பு: இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைத் தடுக்க ஊரடங்கு மற்றும் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது இலங்கை அரசு.
இத்தகைய சூழலில் இலங்கை பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து இலங்கை பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 5.9 சதவீதம் சரிவைத் தொடர்ந்து வர்த்தகத்தை அதிகாரிகள் நிறுத்தியுள்ளதாக தெரிகிறது. முன்னதாக அந்த நாட்டில் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில், அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. மேலும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார சிக்கல், கடன் சுமை, அந்நியச் செலாவணி தட்டுப்பாடு போன்றவற்றால் அந்நாட்டு மக்களுக்கு உயிர் வாழ அடிப்படை தேவையான உணவு கூட கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. எரிபொருள் மற்றும் மின்சார வசதி கூட இல்லாமல் சுமார் 22 மில்லியன் மக்கள் திண்டாடுவதாக சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT