Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, "இந்தியா - ஆஸ்திரேலியா இடையே போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், பொருளாதார உறவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நடப்பாண்டு இறுதி மற்றும் 2023-ம் ஆண்டு தொடக்கத்தில், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு பின்பற்றப்பட உள்ளது. இது, இருதரப்புவர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் சிறந்த கருவியாக இருக்கும்.
இந்தியா ஏற்றுமதிக்கு ஆஸ்திரேலியா சிறந்த இடமாக உள்ளது. கடந்த ஏப்ரல்-பிப்ரவரி 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி ரூ.56 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது, மேலும் அதிகரிக்கும். இந்தியாவின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும். நீண்ட கால பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த ஒப்பந்தம்மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த ஒப்பந்தம்2 நாடுகளுக்குமான வெற்றியாக இருக்கும். மருந்து, ஆடை, ஜவுளி,பொறியியல், ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ரத்தினக் கல் மற்றும் நகை துறைகளுக்கு கணிசமான நன்மையை அளிக்கும். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய மாணவர்கள் எளிதாகவேலைவாய்ப்பைக் கண்டறிவார்கள். இரு நாடுகளிலும் சுற்றுலாபோக்குவரத்தை அதிகரிக்கவும் உதவும்" என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறும்போது, "இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பலர் ஆடைகள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்கிறார்கள். கடந்த காலங்களில் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு 5 % சுங்கவரி இருந்தது. தற்போது, இந்த வரி நீக்கப்படும்.இதன்மூலமாக, ஏற்றுமதியாளர்கள் பயன்பெறுவார்கள். திருப்பூரில் இருந்து ஒரு மாதத்துக்கு ரூ.50 கோடிக்கு ஆஸ்திரேலியாவுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படும்.
தற்போது, இந்த ஒப்பந்தத்தால் ஆடை ஏற்றுமதி அதிகரிக்கும்.இது, ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சிஅளிக்கும் விஷயம். இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிரதமர் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT