Published : 01 Apr 2022 11:47 AM
Last Updated : 01 Apr 2022 11:47 AM
புதுடெல்லி: மத்திய அரசின் நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி நாடுமுழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் டோல்கேட் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.120 வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
சென்னை புறநகரில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. வானகரம் சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.65-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, சூரப்பட்டு சுங்கச்சாவடியில் ஒருமுறை சென்று வரக்கூடிய கார், ஜீப், வேன்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கு ரூ.90 -ல் இருந்து ரூ.100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் சுங்க சாவடிகளை கடந்த வாகனங்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனை அறியாத சில வாகன ஓட்டிகளில் சுங்க சாவடி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சாலையை கடந்து சென்றபோது வாங்கிய கட்டணத்துக்கு பதிலாக நள்ளிரவு தாண்டி திரும்பி வந்தபோது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் வாகனங்களில் வந்தவர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT