Published : 24 Mar 2022 04:34 PM
Last Updated : 24 Mar 2022 04:34 PM
புதுடெல்லி: அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதற்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
அரசின் இ-சந்தை 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருடாந்திர கொள்முதல் செய்து சாதனை செய்திருப்பதாகவும், 57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Happy to know that @GeM_India has achieved order value of Rs 1 Lakh Crore in a single year! This is a significant increase from previous years. The GeM platform is especially empowering MSMEs, with 57% of order value coming from MSME sector. pic.twitter.com/ylzSezZsjG
— Narendra Modi (@narendramodi) March 24, 2022
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் கூறியிருப்பதாவது:
‘‘அரசின் இ-சந்தை @GeM_India ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! முந்தைய ஆண்டுகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
57சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT