Published : 09 Mar 2022 07:25 AM
Last Updated : 09 Mar 2022 07:25 AM
புதுடெல்லி: ரஷ்யா மீது அமெரிக்கா உட்படமேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில், ரஷ்யாவுடனான பணப் பரிவர்த்தனைக்கு இந்தியா மாற்று வழியை நடைமுறைப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ரஷ்யாவுடனான பரிவர்த்தனை பெரும்பாலும்யூரோ மூலம் மேற்கொள்ளப்படு கிறது. ரூபாய் – ரஷ்ய ரூபிள் மூலமாக பரிவர்த்தனை மேற்கொள்வது மாற்றுவழியாக முன்வைக்கப்படுகிறது.
2020-21-ம் நிதியாண்டில் இந்தியா - ரஷ்யாவுக்கு இடையே8.1 பில்லியன் டாலர் அளவில் வர்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் நகை, ஆபரண ஏற்றுமதியில் வைரம் 50% பங்குவகிக்கின்றன. இந்நிலையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாகி யுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT