Published : 04 Mar 2022 08:41 PM
Last Updated : 04 Mar 2022 08:41 PM
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை சர்வதேச சமூகம் விதித்துள்ளது. இதனால் ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட அனைத்துத் திட்டப் பணிகளையும் நிறுத்துவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
2014-ம் ஆண்டிலிருந்தே ரஷ்யாவில் எவ்வித முதலீடு அல்லது கடன் எதையும் உலக வங்கி வழங்கவில்லை. பெலாரஸுக்கு 2020-ம் ஆண்டிலிருந்து கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. உலக வங்கியில் 189 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ரஷ்யாவுக்கு 2014-ம் ஆண்டிலிருந்தே புதிய கடன் எதுவும் வழங்கப்படவில்லை. ரஷ்யா மீது தற்போது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
அதேநேரம், உக்ரைனுக்கு 300 கோடி டாலர் அளிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. மேலும் உக்ரைனுக்கு அவசர நிதியாக 220 கோடி டாலர் நிதி உதவி அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜியோர்ஜிவா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT