Published : 03 Mar 2022 11:11 AM
Last Updated : 03 Mar 2022 11:11 AM
மும்பை: நாடுதழுவிய அளவில் மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் இதில் பல நாட்கள் வட இந்திய மாநிலங்களுக்கானது என்பதால் தமிழகத்தில் விடுமுறை இல்லை.
ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கான விடுமுறையை நிர்ணயித்து ரிசர்வ் வங்கி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் மாநில அளவிலான விடுமுறைகள், பகுதி அளவிலான விடுமுறையும் சேர்த்தே கணக்கிடப்படும். ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும்.
மார்ச் 01: மகாசிவராத்திரி (பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறை)
மார்ச் 03, 2022: லோசர் (சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை)
மார்ச் 04: சாப்சார் குடு (மிசோரமில் விடுமுறை)
மார்ச் 06: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 12: இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 13: ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 17: ஹோலிகா தஹான் (பெரும்பாலான வட இந்திய மாநிலங்களில் விடுமுறை)
மார்ச் 18: ஹோலி 2-ம் நாள் (வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மாநிலங்களில் விடுமுறை)
மார்ச் 19:யோசாங் இரண்டாம் நாள் (ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும்)
மார்ச் 22: பிஹார் தினம் (பிஹாரில் மட்டும்)
மார்ச் 26 2022: நான்காவது சனிக்கிழமை
மார்ச் 27 2022: ஞாயிற்றுக்கிழமை
தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT