Published : 02 Feb 2022 01:32 PM
Last Updated : 02 Feb 2022 01:32 PM

மத்திய பட்ஜெட்: தொழிலதிபர்கள் கருத்து என்ன?

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்- கோப்புப் படம்

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டுக்கு தொழில்துறையினர் பரவலாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதுகுறித்து தொழில்துறையினர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் கூறியதாவது:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பொருளாதாரத் துறையால் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை போலவே சிறப்பான பட்ஜெட்டை உருவாக்கி, அதிக உற்பத்தி செலவினங்களை நோக்கிய போக்கைத் இந்த பட்ஜெட்டும் தொடர்கிறது.

மகிந்திரா குரூப், ஆனந்த் மகிந்திரா கூறியதாவது:

இக்கட்டான இந்த சமயத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கில் மட்டும் தாராளமயமாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

டாடா ஸ்டீல் தலைமை நிர்வாக அதிகாரி டி.வி.நரேந்திரன் கூறியதாவது:

இது மற்றொரு முற்போக்கான, எதிர்காலத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட். இது பொருளாதாரத்தை விரைவான வளர்ச்சிப் பாதையில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக பரந்த பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கும் .

ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் ஹர்ஷ் கோயங்கா கூறியதாவது:

நிலைத்தன்மையும் அதிரடியும் நிறைந்ததாக இந்த பட்ஜெட் உள்ளது. உள்கட்டுமானம், வர்த்தகச் சட்டங்கள், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சம், அந்நிய நேரடி முதலீடு போன்றவற்றில் முக்கியத்துவம் செலுத்துவதாக பட்ஜெட் உள்ளது.

பயோகான் நிறுவனத்தின் கிரண் மசூம்தார் ஷா கூறியதாவது:

எதிர்மறையான கருத்துகள் எதுவும் இல்லாத வகையில் சரியான பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மொபைல் போன் தயாரிப்பு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மொஹிந்த் கூறியதாவது:

பிஎல்ஐ திட்டங்களின் பிரதமரின் தைரியமான மற்றும் வலுவான செயல் திட்டம் வரவேற்கத்தக்கது. 5ஜிக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வடிவமைப்பு, அதற்கான திட்டங்களை வரவேற்கிறோம்.

அசோக் லேலண்ட் லிமிடெட், செயல் தலைவர், தீரஜ் ஹிந்துஜா:

2022-23 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் சமர்ப்பித்துள்ளார். நிலையான திட்டமிடல், மேம்பாடு, தூய்மையான ஆற்றல் மாற்றம், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பட்ஜெட்டாக உள்ளது. விரைவான பொருளாதார மறுமலர்ச்சிக்கான கணிசமான மூலதன முதலீடுகளை எதிர்பார்க்கலாம். கல்வி, டிஜிட்டல் மற்றும் சுத்தமான இயக்கம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கது.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x