Published : 06 Jun 2014 12:25 PM
Last Updated : 06 Jun 2014 12:25 PM

பேட்ரிகா ரூஸோ - இவரைத் தெரியுமா?

$ அல்காடெல்-லூசென்ட் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி.

$ போதையில்லா அமெரிக்கா அறக்கட்டளையின் தலைவர். தவறான போதைப் பழக்கம், போதைப்பழக்கத்துக்கு அடிமையாதல், போதைப் பழக்கத்தால் ஏற்படும் காயங்கள் இவற்றை தடுப்பதற்காக சர்வதேச அளவில் கொள்கை வகுக்கும் அறக்கட்டளையாக இது திகழ்கிறது.

$ 1982-ம் ஆண்டு அமெரிக்காவின் லூசென்ட் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் 1992-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவுத் தலைவராக உயர்ந்தார். 1997-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் துணைத் தலைவரானார். 1999-ல் இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியானார்.

$ 2000-வது ஆண்டு லூசென்ட் நிறுவனத்திலிலிருந்து வெளியேறிய இவர் மீண்டும் 2002-ம் ஆண்டில் இந்நிறுவனத்துக்கு தலைமையேற்றார். மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தில் செயல்பட்டு வந்த நிறுவனத்தை 2004-ம் ஆண்டு முதல் லாபமீட்ட வைத்தார்.

$ 2006-ம் ஆண்டு பிரான்ஸின் அல்காடெல் நிறுவனத்துடன் லூசென்ட் நிறுவனத்தை இணைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.

$ 2008-ம் ஆண்டு இந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய இவர் 9 வெவ்வேறு துறையைச் சேர்ந்த 118 நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

$ அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்தில் இவர் அமெரிக்காவின் தொலைத் தொடர்புத்துறை தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக பணியாற்றினார்.

$ ஹார்வர்ட் வணிகவயில் பல்கலைக் கழகத்தில் முதுநிலை நிர்வாகவியல் படிப்பும், ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல், வரலாறு பிரிவில் இளங்கலைப் பட்டமும் பெற்றவர். கொலம்பியா கல்லூரி இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x