Published : 01 Jan 2022 12:27 PM
Last Updated : 01 Jan 2022 12:27 PM
புதுடெல்லி: வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான கட்டணங்கள் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளன.
ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான பரிமாற்றக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர 2019-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு அளவையும் மறு ஆய்வு செய்தது. அதன்படி ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
முதல் கட்டமாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்குவதற்கான கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதுபோலவே ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணமும் மாற்றியமைக்கப் பரிந்துரைக்கப்பட்டது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஏடிஎம்களில் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ஐந்து முறை இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதேபோல மற்ற வங்கி ஏடிஎம்களில் எடுப்பதாக இருந்தால் மெட்ரோ நகரங்களில் மூன்று முறையும் மெட்ரோ அல்லாத ஏடிஎம் மையங்களில் 5 முறையும் இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.
ஏடிஎம் இயந்திரங்களில் போன்றவற்றுக்கான செலவு அதிகரித்துள்ளதால் வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனைக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி வங்கிகள் தங்களது ஏடிஎம் பரிவர்த்தனைக் கட்டணங்களை உயர்த்தியது. ஜனவரி 1-ம் தேதியான இன்று முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி ஒரு வாடிக்கையாளர் வங்கி ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இனி 21 ரூபாய் பிடிக்கப்படும். குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீங்கள் 100 ரூபாய் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணமாகப் பிடித்தம் செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT