Published : 20 Jun 2014 11:14 AM
Last Updated : 20 Jun 2014 11:14 AM
சமூக நலத்திட்டங்களுக்கு அரசு செலவிடுவதற்காக ஒதுக்கிய தொகையில் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ. 6.58 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இத்தகவலை திட்டக் கமிஷனின் மதிப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது.
திட்டம் சாரா செலவுகளுக்கான நிதி ஆதாரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரிப்பதாக வைத்துக் கொண்டாலும் பற்றாக்குறை ரூ. 6.58 லட்சம் கோடியாக இருக்கும் என்று கமிஷன் தெரிவித்துள்ளது.
12-வது ஐந்தாண்டு திட்ட காலம் 2012-ம் ஆண்டு தொடங்கியது. முதல் மூன்று ஆண்டுகளில் அரசு மொத்த ஒதுக்கீட்டு அளவான ரூ. 35.68 லட்சம் கோடியில் 40.48 சதவீதத்தை ஒதுக்கியது.
முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடப்புக் கணக்கு பற்றாக் குறையைக் குறைப் பதற்காக திட்டச் செலவுகளுக்கான ஒதுக்கீட்டை இரண்டு ஆண்டுகளுக்குக் குறைத்தது. இதன்படி முதல் ஆண்டில் (2012-13) மொத்தம் செலவிட்ட தொகை ரூ. 5.21 லட்சம் கோடியாகும். இருப்பினும் உண்மையான ஒதுக்கீட்டுச் செலவை விட இது ரூ. 4.14 கோடி குறைவாகும்.
இதையடுத்து இரண்டாவது ஆண்டில் ரூ. 5.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. திருத்திய மதிப்பீட்டில் இந்தத் தொகை ரூ. 4.76 லட்சம் கோடியாகக் குறைந்தது. நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 5.55 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை ரூ. 14.44 லட்சம் கோடியாகும்.
மத்தியில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான அரசு அடுத்த மாதம் முழுமையான பட்ஜெட்டை நடப்பு நிதி ஆண்டுக்காக தாக்கல் செய்ய உள்ளது. அப்போது 12-வது திட்ட காலத்துக்கு உரிய ஒதுக்கீட்டை அளிக்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மொத்தம் 70 அமைச்சகம் மூலம் 66 மத்திய உதவி திட்டங்கள் வழியாக திட்டக் குழு செலவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
12-வது நிதி ஆண்டுக்கான செலவு மதிப்பு ரூ. 35.68 லட்சம் கோடியாகும். இது முந்தைய ஒதுக்கீட்டு அளவைக் (11-வது நிதி ஆண்டுக்கானது) காட்டிலும் 124.53 சதவீதம் அதிகமாகும். முந்தைய திட்ட ஆண்டில் செலவிட்ட தொகை ரூ. 15.89 லட்சம் கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT