Published : 26 Nov 2021 04:50 PM
Last Updated : 26 Nov 2021 04:50 PM
தென் ஆப்ரிக்க உருமாறிய கரோனா வைரஸ் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவடைந்தன.
உலகம் முழுவதும் கரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பற்றிய கவலை நிலவி வருகிறது. பல்வேறு நாடுகளும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதன் தாக்கத்தால் ஆசிய பங்குச் சந்தைகள் இன்று ஏற்றமடைந்தன.
இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் ஏற்றத்தில் இருந்து வந்தது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்று 60 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்தநிலையில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது.
தொடர்ந்து சரிந்து கொண்டே போன பங்குச்சந்தைகள் காலை 11 மணியளவில் 1400 புள்ளிகள் சரிவை சந்தித்தன பிறகு 11.30 மணியளவில் 1200 புள்ளிகள் என்ற அளவில் சரிந்தது.
வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 1687 புள்ளிகள் சரிந்து 57107ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 509 புள்ளிகள் சரிந்து 17026 ஆகவும் இருந்தன.
தென் ஆப்ரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கை நீட்டித்தும் வருகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கமான சூழல் நிலவுவதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT