Published : 15 Mar 2016 10:43 AM
Last Updated : 15 Mar 2016 10:43 AM
அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைஸர் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கோரக்ஸ் இருமல் மருந்து விற்பனையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஃபைஸர் நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் கோரக்ஸ் இருமல் நிவாரணி மிகவும் பிரபலம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துக் கடைகளில் கிடைக்கும் இருமல் மருந்து இதுவாகும். ஆனால் இந்த மருந்தை சாப்பிடுவது மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவித் துள்ளன. இதையடுத்து இந்த மருந்து விற்பனையை நிறுத்த ஃபைஸர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோரக்ஸ் இருமல் மருந்தில் குளோபினராமைன் மலேட் மற்றும் கொடைன் சிரப் உள்ளது. கடந்த வாரம் மத்திய அரசு தடை விதித்த 344 மருந்துக் கலவைகளில் கொடைன் சிரப்பும் ஒன்றாகும். இதையடுத்து இந்த மருந்து விற்பனையை நிறுத்த ஃபைஸர் முடிவு செய்துள்ளது.
தடை செய்யப்பட்ட மருந்துப் பொருள்களின் கூட்டு சேர்க்கை யில் தயாரிக்கப்படும் மருந்துகளுக் கான அனுமதி மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. இந்த மருந்துப் பொருள்களுக்கு மத்திய அரசின் அனுமதி சட்டப் பூர்வமாக தேவையாகும்.
கோரக்ஸ் இருமல் நிவாரணி மருந்து விற்பனை நிறுத்துவதென ஃபைஸெர் நிறுவனம் முடிவு செய்திருந்தாலும் அது நிறுவனத் தின் லாபத்தை பெரிதும் பாதிக்கும் என தெரிகிறது.
கோரக்ஸ் மருந்து விற்பனை வருமானம் மட்டும் 176 கோடி யாகும். டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் நிறுவன விற்பனை வருமானம் பற்றிய அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் 30 ஆண்டுகளுக் கும் மேலாக மிகவும் நம்பிக்கைக் குரிய பிராண்டாக கோரக்ஸ் விளங்குவதாகவும் இருப்பினும் இதற்கு மாற்று நடவடிக்கை குறித்து நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான அபாட் லேபரட்டரீஸ் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் பென்சிடைல் எனும் இருமல் நிவாரணியை விற்பனை செய்கிறது. இந்த மருந்திலும் கொடைன் சிரப் கலவை உள்ளது.
இந்தியாவில் 100 கோடி டாலர் வருமானம் ஈட்டும் அபாட் நிறுவன விற்பனை வருமானத்தில் பென்சிடைல் பங்கு 3 சதவீத மாகும். இந்த மருந்தின் மீது தடை விதிப்பதால் ஏற்படும் பாதக அம்சங்களை நிறுவனம் ஆராய்ந்து வருவதாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
கொடைன் சிரப் கடத்தப்பட்டு இந்தியாவில் விற்கப்படுகிறது. இதற்கு பலர் அடிமையாகி யுள்ளனர். போதை மருந்தாக இதைப் பயன்படுத்துவால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த அக்டோபரில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT